LOADING...
ட்ரெண்ட் ஆகும் #RIPCartoonNetwork காரணம் என்ன? கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? 
எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது

ட்ரெண்ட் ஆகும் #RIPCartoonNetwork காரணம் என்ன? கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா? 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2024
11:14 am

செய்தி முன்னோட்டம்

'80 மற்றும் '90 களின் காலகட்டத்தில் குட்டிஸ்களின் ஃபேவரிட் டிவி சேனலாக திகழ்ந்தது கார்ட்டூன் நெட்ஒர்க் (Cartoon Network). ஸ்மார்ட் டிவி, யூட்யூப் போன்றவை பிரபலமடையாத காலத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கும் ஒரே சேனல் இது தான். இந்த நிலையில் இன்று காலை முதல், எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதை பார்ப்பவர்கள், கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னால் இருக்கும் உண்மைத்தன்மையை தற்போது ஆராய்வோம்.

எதற்காக ட்ரெண்டிங்?

சேனல் மூடப்படவுள்ளதால் #RIPCartoonNetwork ட்ரெண்டிங்கில் உள்ளதா?

அனிமேஷன் ஒர்க்கர்ஸ் யுனைடெட் என்ற X பக்கம் தான் முதலில் இதை துவக்கியது. இதில் ஓர் அனிமேஷன் வீடியோவை பகிர்ந்து, இந்த துறையில் நடக்கும் வெளியே தெரியாத பணி நீக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த ட்ரெண்ட் துவக்கப்பட்டது. கோவிட் காலகட்டத்திற்கு பின்னர், சரிவை சந்தித்து வரும் இந்த நிறுவனத்தின் பங்குகள், நிறுவனத்தின் செயல்பாடுகளை தொடர, அவுட்சோர்சிங், பணி நீக்குங்கள், ஒப்பந்தங்கள் ரத்து என செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலை தொடர்ந்தால் கார்டூன் அனிமேஷன் பணியாளர்கள் நிலைமை கேள்வி குறியாகி விடும் என்பதனால், இந்த ட்ரெண்ட்-ஐ துவக்கியுள்ளது அனிமேஷன் ஒர்க்கர்ஸ் யுனைடெட். இந்த பதிவு 4 மணி நேரத்தில் 3 மில்லியனுக்கும் அதிகமான வ்யுஸ்களை பெற்றுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

#RIPCartoonNetwork

Advertisement