Page Loader
கல்கி 2898 AD திரைப்படத்தில் இணையும் துல்கர் சல்மான்
கல்கி 2898 AD திரைப்படத்தில் இணையும் துல்கர் சல்மான்

கல்கி 2898 AD திரைப்படத்தில் இணையும் துல்கர் சல்மான்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2023
08:03 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் திரைப்படம் என்றால், அது பிரபாஸ்-கமல்ஹாசன் நடிக்கும் 'கல்கி 2898AD'. பான்-இந்தியா படமாக, அதிக பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் டீஸர் காமிக்-கான் விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் எனவும் கூறப்பட்டது. இப்படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி என நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது. எதிர்காலத்தில் நடைபெறும் ஒரு கற்பனை sci-fi கதை இப்படம். இப்படத்திற்கு இசை, சந்தோஷ் நாராயணன் ஆவர். இந்நிலையில், தனது 'கிங் ஆஃப் கோத்தா' படத்தின் ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்த நடிகர் துல்கர் சல்மான்,'கல்கி 2898 AD' படத்தின் ஷூட்டிங்கை காண தான் சென்றிருந்ததாகவும், இது பற்றி ஏதும் வெளியிடமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

கல்கி 2898 AD திரைப்படத்தில் துல்கர்