LOADING...
த்ரிஷ்யம் 3 ஓடிடி தேதியை அறிவித்தது அமேசான் பிரைம்; எப்போது ரிலீஸ்?
த்ரிஷ்யம் 3 ஓடிடி தேதியை அறிவித்தது அமேசான் பிரைம்

த்ரிஷ்யம் 3 ஓடிடி தேதியை அறிவித்தது அமேசான் பிரைம்; எப்போது ரிலீஸ்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2026
01:11 pm

செய்தி முன்னோட்டம்

மலையாளத் திரையுலகில் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியச் சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த பிரம்மாண்ட க்ரைம் த்ரில்லர் திரைப்படமான'த்ரிஷ்யம் 3' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி (OTT) ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து, இத்திரைப்படம் வருகிற ஜூன் 18 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. அமேசான் பிரைம் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில்,"ஜார்ஜ்குட்டியும் அவரது குடும்பத்தினரும் உங்களின் திரைகளில் புதிய ரகசியங்களுடன் காத்திருக்கிறார்கள்"* என்று பதிவிட்டு இந்த வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய இத்திரைப்படம் மிக விரைவிலேயே டிஜிட்டல் தளத்திற்கு வரவிருப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ்

ரூ.330 கோடி பாக்ஸ் ஆபீஸ் சாதனை

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த மே 21 அன்று திரையரங்குகளில் வெளியான 'த்ரிஷ்யம் 3', ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினரின் மர்மக் கதையின் இறுதிப் பாகமாக உருவான இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டி உலகளவில் 330 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவின் மிக முக்கியமான மாபெரும் வெற்றிகளில் ஒன்றாக இது மாறியுள்ளது. இத்திரைப்படம் அதன் அசல் மலையாள மொழியோடு சேர்த்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியாகிறது.

Advertisement