Page Loader
மீண்டும் அஜித்தை இயக்கியதை பற்றி மனம் திறந்த இயக்குனர் H.வினோத்
மீண்டும் அஜித்தை-ஐ இயக்கியதை பற்றி மனம் திறந்த இயக்குனர் H .வினோத்

மீண்டும் அஜித்தை இயக்கியதை பற்றி மனம் திறந்த இயக்குனர் H.வினோத்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 12, 2023
04:57 pm

செய்தி முன்னோட்டம்

பொங்கல் ரிலீசான, அஜித் நடித்த 'துணிவு' படம் நேற்று வெளியானது. H .வினோத் இயக்கிய இந்த படத்தில், அஜித் நெகடிவ் ரோலில் நடித்துள்ளதாகவும், இது பேங்க் கொள்ளை பற்றிய படம் எனவும் கூறப்படுகிறது. அஜித் - வினோத் கூட்டணியில் வெளியான 3 வது படமாகும் இது. இதற்கு முன்னர், 'வலிமை' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய படங்களில், இருவரும் இணைந்துள்ளனர். அஜித்துடன் தொடர்ந்து பணியாற்றுவது குறித்து, சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசிய வினோத், அஜித் குறித்து தொடர்ந்து பணிபுரிவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது எனக்கூறினார். அஜித்துடன் தொடர்ந்து இணைவது ஆரோக்கியமானதா, இல்லையா என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் கூறினார்.

வினோத்தின் எதிர்கால திட்டங்கள்

அஜித்துடன் பணியாற்றயது பற்றி பேசிய வினோத்

ஒரு திரைப்படத்தை இயக்கும் பொழுது, அதில் பணி புரியும் குழுவிற்கு ஏதேனும் அசௌகிரியம் உள்ளதா என்பதை மட்டும் தான் பார்க்க நேரும் எனவும், அஜித்தும், தானும் மீண்டும் இணைவது, இருவருக்கும் ஒரு கற்பித்தலை தருகிறது எனவும் குறிப்பிட்டார். முந்தைய இரண்டு படங்களை மனதில் வைத்து, அஜித்தும், தானும் நிறைய கற்றுக்கொண்டு, அதை இந்த படத்தில் செயல்படுத்த முடிந்தது என்றும் வினோத் கூறினார். தற்போது, வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து, சிறிது இடைவேளை எடுக்க போவதாகவும், அதன் பின், நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரின் படங்களை பற்றிய சில திட்டங்கள் உள்ளன என்றும் வினோத் தெரிவித்தார்.