Page Loader
AK 62 வில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforvigneshshivan ஹாஷ்டேக்
AK 62 வில் இருந்து விலகும் விக்னேஷ் சிவன்?

AK 62 வில் இருந்து விலகுகிறாரா விக்னேஷ் சிவன்? இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் #justiceforvigneshshivan ஹாஷ்டேக்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 28, 2023
07:35 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான AK 62 படத்தை இயக்கப்போவது விக்னேஷ் சிவன் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேறு ஒரு இயக்குனரை வைத்து படத்தை இயக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் காரணத்தையும் ஊடங்கங்கள் யூகிக்கின்றன. அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம் ஒரு ஆக்ஷன் படம். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த படத்தை போல, மற்றொரு படம் எடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விக்னேஷ் சிவன் படங்களில், காதலும், காமெடியும் நிறைந்து இருக்கும். அந்த வகை படத்தில், தற்போது அஜித்தை இயக்குவது உசிதமான இருக்காது என தயாரிப்பாளர் யோசிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

AK62

ட்ரெண்ட் ஆகும் #justiceforvigneshshivan ஹாஷ்டேக்

விக்னேஷ் சிவனால் ஆக்ஷன் படங்களை இயக்க முடியுமா எனவும் தயாரிப்பாளர் தரப்பு யோசிப்பதால், இந்த படத்தில் இருந்து அவரை நீக்க முடிவு எடுத்து இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில், விக்னேஷ் சிவனின் ரசிகர்கள், #justiceforvigneshshivan ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், விக்னேஷ் சிவனுக்கு பதிலாக யார் இந்த படத்தை எடுக்க கூடும் எனவும் விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு தரப்பு, 'பில்லா', 'ஆரம்பம்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குவார் எனக்கூறுகிறது. மறுதரப்பு, தடையறத்தாக்க, 'தடம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவிருப்பதாகவும் கூறுகிறது. இதுகுறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில், விக்னேஷ்சிவன், தான் லண்டனில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது, குழப்பத்தை ஏற்படுத்துகிறது.