Page Loader
தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு 
தளபதி 68 : 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு

தளபதி 68 : LA -வில் வெற்றிகரமாக 3D ஸ்கேன் முடிந்ததை அறிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2023
10:38 am

செய்தி முன்னோட்டம்

'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றனர். அங்கிருக்கும் USC இன்ஸ்டிடியூட் ஃபார் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவோடு இணைந்து, நடிகர் விஜய்க்கான லுக் டெஸ்டை 3D ஸ்கேன் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்த இந்த பயணம் என கூறப்பட்டது. இந்த குழு, ஏற்கனவே அவதார், ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற பல பிரமாண்ட ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த குழுவினரை இந்தியன் 2 மற்றும் கல்கி 2898 படத்திற்காகவும் நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

card 2

எதிர்காலத்தில் விஜய்?

இந்நிலையில், 'தளபதி 68' படத்திற்காக நடிகர் விஜய்யும் அவர்களை நாடியிருப்பது, மேலும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏற்கனவே ஒரு பேட்டியில், வெங்கட் பிரபு, தளபதி விஜயை தான் இயக்குவதாக இருந்தால், அது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, நேற்று இதன் புகைப்படங்களையும் வெங்கட் பிரபு பகிர்ந்து, "வெல்கம் டு தி பியூச்சர்" என்ற கேப்ஷன் போட்டிருந்தை பார்த்தால், இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இருக்குமோ என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். இது வரை விஜய் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை எடுத்ததில்லை. அதனால் அவரின் ரசிகர்கள், அவரின் லுக்-ஐ பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

ட்விட்டர் அஞ்சல்

தளபதி 68!