தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்கள் வழங்கி கொண்டிருந்தபோது மயக்கமடைந்த இயக்குநர் டி.ராஜேந்தர்
செய்தி முன்னோட்டம்
கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதி கனமழை கொட்டியது.
இதனால் வெள்ளம் ஏற்பட்டு அப்பகுதிகளில் கடும் பாதிப்படைந்தது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிவு காரணமாக கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க பிரபல இயக்குநர் டி.ராஜேந்தர் இன்று தூத்துக்குடி சென்றிருந்தார்.
தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தில் நிவாரண பொருட்களை வழங்கி கொண்டிருந்த போது, அவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.
அதனையடுத்து, அங்கிருந்த நிர்வாகிகள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
மயக்கமடைந்த இயக்குநர் டி.ராஜேந்தர்
#WATCH | தூத்துக்குடி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது மயங்கிய நடிகர் டி.ராஜேந்தர்#SunNews | #TRajendar | #Thoothukudi pic.twitter.com/lv0x5LChBK
— Sun News (@sunnewstamil) December 30, 2023