ஆசியாவில் முதல்முறையாக நிஜ சிங்கத்துடன் படமாக்கட்ட தமிழ் திரைப்படம் 'மாம்போ'
இயக்குனர் பிரபு சாலமன், மைனா, கும்கி போன்ற வெற்றி படங்களை தந்தவர். அவருடைய படைப்புகள் அனைத்துமே கண்களுக்கு குளுமையான ஒளிப்பதிவுடன், இயற்கை சார்ந்த எளிய மனிதர்களும், அவர்களுடைய உணர்வுகளை சார்ந்தே இருக்கும். அவர் கடைசியாக கோவை சரளாவை கதாநாயகியாக வைத்து 'செம்பி' என்ற படத்தை எடுத்திருந்தார். வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. அதன்படி, அவரது அடுத்த படத்தின் பெயர் 'மாம்போ' என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆசியாவில் முதன்முறையாக ஒரு நிஜ சிங்கத்தை வைத்து படம்பிடிக்கபட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. படத்திற்கு இசையமைத்திருப்பது இமான்.