
கோலாகலமாக நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்; பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஐஸ்வர்யா ஷங்கருக்கு இது இரண்டாவது திருமணமாகும்.
முன்னதாக கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் ஐஸ்வர்யாவிற்கு திருமணம் நடைபெற்றது.
ஆனால் ரோஹித் மீது பல பாலியல் புகார்கள் வெளிவந்த நிலையில், இருவருக்கும் விவகாரத்தானது. தற்போது தருண் கார்த்திகேயன் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.
தருண், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது ஷங்கர், இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம்
#PHOTOS | இயக்குநர் சங்கரின் மகள் ஐஸ்வர்யா சங்கர் - தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய திரைப்பிரபலங்கள்#SunNews | #DirectorShankar | @rajinikanth | @ikamalhaasan | @Suriya_offl | @chiyaan | @shankarshanmugh pic.twitter.com/GhYoG43xIW
— Sun News (@sunnewstamil) April 15, 2024