Page Loader
விமானத்தில் பர்ஸை தொலைத்த செல்வராகவன்; 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம்
செல்வராகவனின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது

விமானத்தில் பர்ஸை தொலைத்த செல்வராகவன்; 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிறுவனம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2023
04:10 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், தொடர்ந்து, '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' போன்ற கிளாசிக் படங்களை உருவாக்கினார். இவருடைய படத்திற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இந்நிலையில், சமீபத்தில் செல்வராகவன் சமீபத்தில் மதுரை சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பி சென்னைக்கு வரும் வழியில், ஏர் இந்தியா விமானத்தில் தனது பர்ஸை தொலைத்து விட்டார். ஆனால், அதை உணர்ந்து அவர் தேடத்தொடங்கும் முன்னரே, சரியாக 15 நிமிடங்களில், அவரின் பர்ஸை மீட்டெடுத்து, அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் ஏர் இந்தியா நிர்வாகிகள். இந்த சம்பவத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் செல்வராகவன்

ட்விட்டர் அஞ்சல்

செல்வராகவன் ட்வீட்