
தி கோட் திரைப்படம் வெற்றி பெற வெங்கட் பிரபுவின் சிஷ்யர் பா.ரஞ்சித் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரைக்கு வந்துள்ள தி கோட் திரைப்படம் வெற்றியடைய இயக்குனர் பா.ரஞ்சித் வாழ்த்தியுள்ளார்.
ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் தி கோட்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள நிலையில், பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் வியாழக்கிழமை திரைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், தங்கலான் இயக்குனர் பா.ரஞ்சித், தி கோட் திரைப்படம் வெற்றி பெற விஜய், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பா.ரஞ்சித்தின் எக்ஸ் பதிவு
Best wishes my dear sir @vp_offl @actorvijay Na @archanakalpathi @thisisysr ❤️❤️❤️
— pa.ranjith (@beemji) September 4, 2024
& team for a great victory 💥💥💥#GOAT
பா.ரஞ்சித்
பா.ரஞ்சித் - வெங்கட் பிரபு தொடர்பு
பா.ரஞ்சித் தனது ஆரம்ப காலங்களில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், தி கோட் பட புரமோஷனின்போது பா.ரஞ்சித் உடனான தொடர்பை பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, ரஞ்சித்தின் மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் தனக்கு பிடிக்கும் என்றார்.
அதே நேரத்தில் தனக்கு அரசியல் குறித்து எதுவும் தெரியாது என்பதால், அவரது படத்தில் உள்ள அரசியலை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், பா.ரஞ்சித்திற்குள் ஒரு கமெர்ஷியல் இயக்குனர் ஒளிந்திருப்பதாக தெரிவித்த வெங்கட் பிரபு, கண்டிப்பாக பா.ரஞ்சித் கமெர்ஷியல் படங்களை இயக்க வேண்டும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.