கர்நாடக தேர்தலில் ஆர்வம் காட்டிய பா. ரஞ்சித் - வேட்பாளருக்கு ஆதரவு!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். எப்பொழுதும் அரசியல் மற்றும் சமூக பண்பாட்டில் அக்கறை கொண்டு பேசி வருகிறார். தற்போது நடிகர் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இப்படமானது கோலார் தங்க வயலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோலார் தங்க வயலில் ஷூட்டிங் நடைப்பெற்றுவரும் நிலையில், கர்நாடகாவில் மே மாத சட்டசபை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும், இந்திய குடியரசு கட்சி முன்னாள் உறுப்பினரான எஸ்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.
இந்திய குடியரசு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பா. ரஞ்சித்
இவர், பா. ரஞ்சித்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து ஆதரவை கேட்டுள்ளார். அதற்கு பா. ரஞ்சித்தும் தனது ஆதரவை தெரிவித்ததோடு, இந்த கட்சியை சேர்ந்த பல வேட்பாளர்கள் அதிக முறை வெற்றியை சந்தித்து உள்ளனர். எனவே தொகுதியை இழந்து நிற்கும் இந்த கட்சியானது. மீண்டும் அதனை கைப்பற்ற வேண்டும் என்ற சூழலில் உள்ளது. எனவே, எஸ். ராஜேந்திரன் தங்கவயல் தமிழர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.
இந்த காலவரிசையைப் பகிரவும்