Page Loader
உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்
உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார், பா.ரஞ்சித்

உதவி இயக்குனர் மீது கிரிமினல் வழக்கு; கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பா.ரஞ்சித்

எழுதியவர் Venkatalakshmi V
May 09, 2023
06:34 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணிபுரியும் விடுதலை சிகப்பி என்பவரின் மீது கிரிமினல் வழக்கு பாய்ந்ததையடுத்து, கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரஞ்சித். அவர் இது குறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும்" "ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது,"என ரஞ்சித் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

பா.ரஞ்சித் கண்டனம்