Loading...
மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
#VJS51 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து, மலேசிய முருகன் கோவிலில் குழு புகைப்படம் எடுத்த படக்குழுவினர்.

மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ட்ரெயின்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

எழுதியவர் Srinath r
Dec 01, 2023
10:58 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ரயில் தண்டவாளம் மற்றும் ரயில்கள் செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ள பஸ்ட் லுக் காட்சியில், விஜய் சேதுபதியை தாடி மீசையுடன் பார்க்க முடிகிறது. இக்காட்சியை வெளியிட்டு பட குழு, "இந்த பயணம் தொடங்குகிறது" என பதிவிட்டுள்ளனர். இப்படத்தை கலைப்புலி எஸ் தானு, வி கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. மிஷ்கின் கடைசியாக உதயநிதி ஸ்டாலினை வைத்து சைக்கோ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில், இப்படம் அவருக்கு பதினோராவது படமாக அமைய உள்ளது.

embed

'ட்ரெயின்' படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி

3rd card

விஜய் சேதுபதி நடித்துவரும் படங்கள்

இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2, மகாராஜா உள்ளிட்ட படங்களில் தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் நிலையில், நேற்று இவரது 51வது படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நிறைவடைந்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்தின் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில், ருக்மணி வசந்த், யோகி பாபு, அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில், காதல், காமெடி, சண்டை என முழு கமர்சியல் படமாக உருவாகியுள்ளது.

மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு விரைவில் வெளியாகும் என விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

embed

விரைவில் #VJS51 படத்தின் பர்ஸ்ட் லுக்

ADVERTISEMENT