
"மாரி செல்வராஜை நினைத்தால் பெருமையாகவும் இருக்கு பொறாமையாகவும் இருக்கு": இயக்குனர் மணிரத்னம் புகழாரம்
செய்தி முன்னோட்டம்
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்து படங்களை இயக்கி வருபவர் மாரி செல்வராஜ்.
அதன் பின்னர், கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை தந்தவர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் 'வாழை' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இது அவருடைய வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
நேற்று மாலை வாழை படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டு படத்தை பற்றியும், இயக்குனர் மாரி செல்வராஜ்-ஐ வாழ்த்தியும் பேசினர்.
அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய வாழ்த்துக்களை ஒரு வீடியோ பதிவில் வெளியிட்டிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The Master #ManiRatnam About #MariSelvaraj In Vaazhai..🔥#Vaazhai #VaazhaiMovie #NikhilaVimal pic.twitter.com/N0SZXgpoUc
— Cinema Star 🌟 (@CinemaStar_) August 20, 2024
இயக்குநர் மணிரத்னம்
இயக்குநர் மணிரத்னம் பேசியது என்ன?
"மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மத்த படம் மாதிரி எல்லா துறையிலையும் இந்த படத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்".
"உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கு. இதில் எப்படி கிராம கதையில் இவ்வளோ பேரு இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல. எனக்கு பொறாமையா இருக்கு".
"இதில் எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க, இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்" எனக்கூறியுள்ளார்.
வாழை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.