வாழை தொழிலாளர் சமூகத்தின் வலியை பேசும் மாரி செல்வராஜின் 'வாழை'; வெளியான ட்ரைலர்
செய்தி முன்னோட்டம்
சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை பற்றி பேசும் படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை எடுத்து முத்திரை பதித்த இயக்குனர் மாரி செல்வராஜ், தற்போது 'வாழை' படத்தை இயக்கியுள்ளார்.
'வாழை' தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் வலியை பேசியுள்ள படம்.
இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
இந்த படத்தில், தன்னுடைய சிறு வயதில் நேர்ந்த சில அனுபவங்களை வைத்தே இந்த படத்தை இயக்கியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். வாழை திரைப்படம், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.
மாரி செல்வராஜ் கடைசியாக உதயநிதி, வடிவேலு, ஃபஹத் நடித்த 'மாமன்னன்' படத்தை இயக்கியிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Enter into the world of #Vaazhai#வாழை #TrailerOutNow
— VijaySethupathi (@VijaySethuOffl) August 19, 2024
➡️ https://t.co/nNZ0Hu7Y3r#Vaazhai4DaysToGo 🎉✨#VaazhaifromAug23 🩶
@Music_Santhosh @Jayamoorthysing @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @thenieswar… pic.twitter.com/mz1KtWPx4y