
'மாஸ்டர்' திரைப்படம், விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது: லோகேஷ் கனகராஜ்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை மொத்தமாக 5 படங்களே இயக்கியுள்ளார். ஆனால், தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத சக்தியாக உருவாகி உள்ளார்.
முதல் இரண்டு படங்களை தவிர, மற்ற படங்களுக்கு கதாநாயகர்களாக, தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களை இறக்கினார்.
தற்போது இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கை கோர்த்துள்ள திரைப்படம் 'லியோ'.
இந்த திரைப்படம் குறித்த அறிவிப்பு எதுவும் வராதா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது லோகேஷ், ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், லியோ படத்திற்காக, இன்னும் 10 நாட்கள் விஜய்யின் போர்ஷன் ஷூட்டிங் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், தனக்கென்று ஒரு தனி பாணி உள்ளதென்றும், அதில் இருந்து மாறுபட்டே, விஜய் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் 'மாஸ்டர்' எனவும் கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
லோகேஷின் பேட்டி
#LokeshKanagaraj about #LEO in his Latest Interview :⭐
— Laxmi Kanth (@iammoviebuff007) June 19, 2023
• I have a Style of Doing films, But #Master was to Satisfy his Big Fanbase..
• But after knowing him now for 4 Years, the bond became strong & we've been discussing the #LEO story for 3 Years & it went over 5… pic.twitter.com/7J8nm4qPs0
ட்விட்டர் அஞ்சல்
லோகேஷின் பேட்டி
#LokeshKanagaraj in the Latest Interview ⭐ :
— Laxmi Kanth (@iammoviebuff007) June 19, 2023
• Only 10 Days of Shoot left for #ThalapathyVijay portions then other artists portions are there..⭐
• It was a One year travel with him.. we are gonna miss him.. ❣️
• I don't feel any stress working with #ThalapathyVijay .. The… pic.twitter.com/lINNXtbzWz