ஆர்ஜே பாலாஜி திரைப்படத்தில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் இயக்குனர் கோகுல் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 10 நிமிடம் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படம், இதுவரை தான் இயக்கிய படங்களிலேயே சிறந்த படமாக இருக்கும் எனவும் கோகுல் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்து வந்தாலும், அண்மை காலங்களில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான நடன மாஸ்டர் சாண்டியின் பாடலில், கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்
Director LokeshKanagaraj has done cameo in #SingaporeSaloon 🔥. #LokeshKanagaraj #RjBalaji pic.twitter.com/M94oQGW3hu
— REPORTER INDIA (@ReporterIndia_) November 14, 2023