மாரி செல்வராஜ் நமக்கு கிடைச்ச பொக்கிஷம்; இயக்குனர் இமயம் பாரதிராஜா பாராட்டு
செய்தி முன்னோட்டம்
வாழை திரைப்படம் குறித்து பேசியுள்ள இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என பாராட்டியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்த வாழை திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) திரைக்கு வந்தது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைந்து மாரி செல்வராஜ் மற்றும் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பாரதிராஜா மாரி செல்வராஜை பாராட்டி சத்யஜித்ரே போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
பொக்கிஷம்
பாரதிராஜா பாராட்டு - முழு விபரம்
படம் குறித்து பாரதிராஜா கூறுகையில், "சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பார்த்து யோசித்தது உண்டு. வாழை அப்படியொரு படம்.
படத்தை பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனை இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.
மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார். மாரி நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம். சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் படங்களை பார்க்கும்போது பொறாமையாக இருக்கும்.
அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சும் வகையில் என் நண்பன் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான்." எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மாரி செல்வராஜ் எக்ஸ் பதிவு
நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன் . இயக்குனர் இமயத்திற்கு நன்றி ❤️
— Mari Selvaraj (@mari_selvaraj) August 24, 2024
Director Bharathiraja About Vaazhai https://t.co/zzHOEVDMvx via @YouTube pic.twitter.com/KPchfPMUQh