
விஜய்-ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்திற்கு கதை எழுதும் அட்லீ
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அட்லீ அண்மையில் நடந்த ஒரு நேர்காணலில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்திருந்த நிலையில், அப்படத்திற்கு தற்போது கதை எழுதி வருவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அட்லீ இடம், விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், "ஆம். அந்த படத்திற்கான கதையை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்" என தெரிவித்தார். இதன் மூலம் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், சென்னையில் படப்பிடிப்பு நடந்து போது, நடிகர் விஜய் நேரில் சென்று ஷாருக்கானை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
விஜய்-ஷாருக்கான் கூட்டணி உறுதி?
#CinemaUpdate | ஷாருக்கான் - விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லீ!#SunNews | #ShahRukhKhan𓃵 | #Vijay | @Atlee_dir | @actorvijay | @iamsrk pic.twitter.com/3IE8mIyv7q
— Sun News (@sunnewstamil) December 1, 2023