Page Loader
அல்போன்ஸ் புத்திரனின் படத்தின் ஆடிஷனுக்கு க்யூவில் நிற்கும் மக்கள்
தயாரிப்பாளர் அலுவலகத்தில் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்

அல்போன்ஸ் புத்திரனின் படத்தின் ஆடிஷனுக்கு க்யூவில் நிற்கும் மக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2023
07:34 pm

செய்தி முன்னோட்டம்

'ப்ரேமம்', 'நேரம்' போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்க போவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை தயாரிக்கப்போவது, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம் போன்ற படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நடிகர்கள் தேவை என, அல்போன்ஸ் சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த அறிவிப்பின்படி, ஆடிஷன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அதற்கு, 15 வயதிலிருந்து 55 வயது வரையிலானவர்கள் கலந்துகொள்ளலாம் என தெரிவித்திருந்தார். முதல்நாள் அடிஷனான இன்று, கூட்டம் கூட்டமாக மக்கள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழ் படத்திற்கான ஆடிஷனுக்கு விண்ணப்பங்களை வரவேற்ற அல்போன்ஸ்