அடுத்த செய்திக் கட்டுரை

நீங்கள் சினிமா பார்க்கவே கூடாது: RBI ஊழியர்கள் மீது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் காட்டம்
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 03, 2023
02:42 pm
செய்தி முன்னோட்டம்
'நேரம்', 'ப்ரேமம்' போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.
இவரின் படங்களை போலவே, இவரும் காமெடி பிரியர் எனலாம். அவ்வப்போது வித்தியாசமான பதிவுகளை இடுவார்.
அப்படி, அவர் சில நாட்களுக்கு முன்னர் இட்ட ஒரு பேஸ்புக் பதிவு, தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், "ரிசர்வ் வங்கி, சினிமாவுக்கு கடன் தராத காரணத்தால், ரிசர்வ் வங்கி உறுப்பினர்கள், பணியாளர்கள், சினிமா பார்ப்பதை நிறுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு அந்த உரிமை கிடையாது. இந்த முடிவு சார்ந்த நபர்களோ, துறை சார்ந்த அமைச்சரோ கூட, திரைப்படங்களை பார்க்கக்கூடாது. சினிமாவைக் கொல்லும் இந்த பிரச்னையை கவனிக்குமாறு அன்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
முகநூல் அஞ்சல்