விஜய் தேவரகொண்டா உடனான காதலை ஒப்புக்கொண்டாரா ரஷ்மிகா மந்தனா? வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
நடிகை ரஷ்மிகா மந்தனா தான் யாரை திருமணம் செய்ய விரும்புவதாக வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் நடந்த புஷ்பா 2 படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் ராஷ்மிகா மந்தனாவிடம் அவர் திருமணம் செய்ய விரும்பும் நபர் குறித்து கேட்கப்பட்டது.
அந்த நபர் திரையுலகைச் சேர்ந்தவரா இல்லையா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு வெட்கத்துடன் பதிலளித்த ரஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் பெயரைச் சொல்லாமல், "அது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்" என்றார்.
இதன்மூலம் அவர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் என ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக, விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் உறவு குறித்த வதந்திகள் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகின்றன. எனினும் இதுகுறித்து இருவரும் பொதுவெளியில் பேசியது இல்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Rashmika : " Every One Knows that I Love Vijay DeveraKonda " at #Pushpa2TheRule event pic.twitter.com/Z02Uwv83Y5
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) November 24, 2024
விவரங்கள்
விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா லவ் ஸ்டோரி
சமீபத்தில், விஜய் தேவரகொண்டாவும் தான் டேட்டிங் செய்வதை உறுதி செய்தார். கர்லி டேல்ஸுடனான உரையாடலில், "எனக்கு 35 வயதாகிறது; நான் சிங்கள்-ஆக இருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்றார்.
இதன் மூலம் அவரும் முதல்முறையாக பொதுவெளியில் தான் காதல் வயப்பட்டுள்ளதை கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, ராஷ்மிகா மற்றும் விஜய்யின் உறவு குறித்த செய்திகள் உலாவுகின்றன.
ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் 2018இல் கீதா கோவிந்தத்தில் முதல்முறையாக இணைந்தபோது நெருங்கிய நண்பர்களானார்கள்.
டியர் காம்ரேட் படத்திற்காக அவர்கள் மீண்டும் இணைந்த போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.