ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் ஆதரவு பெற்ற ஒரே அரசியல் கட்சி, விஜய்யின் தவெக!
செய்தி முன்னோட்டம்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி வரும் 'மிஷன் இம்பாசிபிலின்' அடுத்த பாகத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
இந்த டீசரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி இடம்பெற்றுள்ளது என இணையத்தில் மீம்கள் வைரலாகி வருகின்றன.
இது உண்மையா?
டீசரை டீகோட் செய்ததில் ஒரு கட்சியில் டாம் க்ரூஸ் கையில் ஒரு கண்ணாடி குடுவையில் "பயோ வெப்பன்" இருப்பது போல காட்சி இடம் பெற்றுள்ளது.
அது விஜய்யின் கட்சி கொடி நிறத்தில் சிவப்பும், மஞ்சளும் கலந்துள்ளதால், விஜய்யின் ரசிகர்கள் களத்தில் இறங்கி இந்த மீமை உலவ விட்டுள்ளனர்.
கோட்
கோட் படத்தில் டாம் க்ரூஸ் ரெபெரென்ஸ்
மிஷன் இம்பாசிபிள் படத்தில் தற்போது விஜய்யின் ரெபெரென்ஸ் உள்ளது என ரசிகர்கள் கட்டுக்கதை காட்டிவரும் அதே நேரத்தில், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் படத்தில் டாம் க்ரூஸின் ரெபெரென்ஸ் இருந்ததையும் மறுப்பதற்கில்லை.
படத்தை பார்க்காதவர்களுக்காக- விஜய் ஒரு காட்சியில் தாய்லாந்தில் ஒரு தரவு கொள்ளையில் ஈடுபடும் போது, அங்கிருந்து தப்பிக்கும் நேரத்தில் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் தீம் மியூசிக்கை முணுமுணுப்பார்.
தற்போது அந்த காட்சியும் வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Tom Cruise full support to @tvkvijayhq @actorvijay @Jagadishbliss 🇪🇸🇪🇸🇪🇸 #TVK #MissionImpossible pic.twitter.com/tDUQylBtcI
— JK 👊 (@JK_x_AK) November 12, 2024
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#TVK reference in #MissionImpossible 🏃🏻♂️ pic.twitter.com/MuUE9N1c9k
— aadhi (@aa_dhi1K97) November 11, 2024