
பைசன் காளமாடன்: துருவ் விக்ரம் - மாரி செல்வராஜ் இணையும் படத்தின் பெயர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
கபடி விளையாட்டை அடிப்படையாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கிறார்.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என சாதிய பாகுபாடை பற்றி அழுந்த சொல்லும் படங்களை எடுத்து வரும் மாரி செல்வராஜ், இப்படத்திலும் அதை சார்ந்தே எடுக்கிறாரா அல்லது வேறு கதைக்களத்தை தேர்வு செய்துள்ளாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இப்படத்திற்கு 'பைசன் காளமாடன்' என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தில் லால், பசுபதி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
embed
பைசன் காளமாடன்
#CinemaUpdate | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.#SunNews | #Bison | @mari_selvaraj pic.twitter.com/ncrxtTFoNm— Sun News (@sunnewstamil) May 6, 2024