
தனுஷ் நடிக்கும் 50-ஆவது படத்தின் பெயர் 'ராயன்'
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50வது படத்திற்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், 'பவர் பாண்டி' என்ற காதல் படத்தை இயக்கி இருந்த தனுஷ், தற்போது அதிரடி வன்முறை படத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
இன்று இப்படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் 'ராயன்' படக்குழு வெளியிட்டது.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
'ராயன்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
#D50 is #Raayan 🔥
— Sun Pictures (@sunpictures) February 19, 2024
🎬 Written & Directed by @dhanushkraja
🎵 Music by @arrahman
Releasing in Tamil | Telugu | Hindi@omdop @editor_prasanna @kalidas700 @sundeepkishan @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss #D50FirstLook pic.twitter.com/vfemOIRKIX