தனுஷ் 50: ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தனுஷின் 'ராயன்' ட்ரைலர் வெளியானது
தனுஷ் தானே நடித்து, இயக்கிய அவரது 50வது படமான 'ராயன்' இன்னும் 10 தினங்களில் வெளியாகிறது. ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தனுஷ்-காளிதாஸ் ஜெயராம்- சந்தீப் கிஷன்- துஷாரா ஆகியோர் உடன் பிறந்தவர்கள். இவர்கள் வாழ்க்கையில் நடைபெறும் திடுக்கிடும் சம்பவங்கள் தான் கதை. ராயன் திரைப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ளனர். ஏற்கனவே பா.பாண்டி என்ற ஜனரஞ்சகமான படத்தை தந்த தனுஷ், இப்படத்தின் மூலம் ஒரு திரில்லர்-ஐ கையில் எடுத்துள்ளார்.