Loading...
தனுஷின் D56 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? வெளியான நடிகர்களின் சம்பள விவரங்கள்
தனுஷின் D56 திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.126 கோடி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷின் D56 படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? வெளியான நடிகர்களின் சம்பள விவரங்கள்

எழுதியவர் Vasuki
Sep 29, 2026
06:27 pm

செய்தி முன்னோட்டம்

லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமாக உருவாகி வரும் D56 படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. தனுஷுடன் இணைந்து வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் மீது தொடக்கம் முதலே எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் பிரம்மாண்ட பட்ஜெட் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தயாரிப்பு

ரூ.126 கோடி பட்ஜெட் மற்றும் நடிகர்களின் சம்பள விவரம்

மாஸ் கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகும் 'D56' திரைப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் சுமார் ரூ.126 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் கதாநாயகன் தனுஷுக்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாகவும், வடிவேலுவுக்கு ரூ.6 கோடியும் சம்பளமாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், பிரைமார்க் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் ஸ்வரூப் ரெட்டி இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இதில் எஸ்.ஜே. சூர்யா, விஜயகுமார், ப்ரீத்தி முகுந்தன் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் இப்படம் 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT