Page Loader
'மெய்யழகன்' முதல் 'தேவாரா' வரை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 தமிழ் படங்கள்

'மெய்யழகன்' முதல் 'தேவாரா' வரை: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் 5 தமிழ் படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2024
03:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வாரம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பல திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது. அவற்றுள் தமிழில் 5 படங்கள் திரைக்கு வர தயாராகவுள்ளது. 2D தயாரிப்பில், 96 படப்புகழ் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள 'மெய்யழகன்' இந்த வாரம், செப்டம்பர் 27 அன்று வெளியாகிறது. கார்த்தி, அரவிந்த் சுவாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்திருப்பது கோவிந்த் வசந்தா. ஏற்கனவே படத்தில், கமல்ஹாசன் பாடியுள்ள பாடல் வைரலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியீடு

இந்த வார ரிலீஸ்

'தேவரா': ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் மற்றும் சைப் கான் ஆகியோர் புதிய காம்பினேஷனில் வெளியாகவுள்ள தேவாரா, இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தின் ட்ரைலரின்படி, அதன் புதிரான கதைக்களம் மற்றும் பரபரப்பான காட்சியமைப்பும் ஒரு பரபரப்பான திரைப்பயணமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இது ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகும் படமாகும். வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இப்படத்திற்கு இசையமைத்திருப்பது அனிருத். பேட்டராப்: பிரபு தேவா, வேதிகா நடிப்பில், சினு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சன்னி லியோன் ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றை தாண்டி, விஜய் ஆண்டனியின் ஹிட்லர் மற்றும் சதீஷின் சட்டம் என் கையில் உள்ளிட்ட படங்களும் வெளியாகவுள்ளன.