LOADING...
'வீரா ராஜ வீர…' பாடல் விவகாரம்: ஏ.ஆர். ரஹ்மான் ₹2 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது

'வீரா ராஜ வீர…' பாடல் விவகாரம்: ஏ.ஆர். ரஹ்மான் ₹2 கோடி செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 25, 2025
05:00 pm

செய்தி முன்னோட்டம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்ற "வீரா ராஜ வீர..." பாடல் தற்போது காப்புரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த பாடல் காப்புரிமை தொடர்பாக புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகர் வாசிஃபுதீன் தாகர் தாக்கல் செய்த வழக்கின் இறுதியில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படக்குழுவிற்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. வாசிஃபுதீன் தாகர் தாக்கல் செய்த மனுவின்படி,"வீரா ராஜ வீர..." பாடல், அவரது தந்தை இயற்றிய "சிவா ஸ்துதி" என்ற பாடலின் அமைப்பு, மெட்டு மற்றும் ஸ்வர அமைப்புகளை ஒத்ததாக இருக்கிறது. அதனால் பாடலின் காப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

உத்தரவு

காப்புரிமை வழக்கில் நீதிமன்ற உத்தரவு

வழக்கின் விசாரணையின் போது, ஏ.ஆர். ரஹ்மான் தரப்பு "சிவா ஸ்துதி" பாடலால் ஈர்க்கப்பட்டு தான் "வீரா ராஜ வீர" உருவாக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டது. இதனை அடிப்படையாக கொண்டு, நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவுகளில்: ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் படக்குழு தரப்பினர் ₹2 கோடி ரூபாயை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும். பாடகர் வாசிஃபுதீன் தாகர் தரப்புக்கு ₹2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தீர்ப்பு, இந்திய சினிமா மற்றும் இசை உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திரைத்துறையில் இன்ஸ்பிரஷன் மற்றும் காப்புரிமை மீறல் குறித்த விவாதங்கள் இருந்து வருகின்ற நிலையில், இத்தீர்ப்பு எதிர்காலத்திலுள்ள இசை உற்பத்தியாளர்களுக்கு ஒரு முன்னோட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.