'நா ரெடி தான்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்
நடிகர் விஜய்-லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. அனிருத் ரவிச்சந்தர் இசையில், இப்படத்தின் முதல் பாடல் சென்ற மாதம், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 'நா ரெடி தான்' என துவங்கும் அந்த பாடலுக்கு பலரும் வைப் செய்துவரும் நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் அதற்கு நடனமாடி, ரீல்ஸ் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது. அதை இசையமைப்பாளர் அனிருத்தும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். நடிகர் விஜய், அனிருத், அசல் கோலார் ஆகியோர் பாடியுள்ள அந்த பாடலின் வரிகள் விஷ்ணு எடவன் எழுதியது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படம், வரும் அக்டோபர் 19 திரைக்கு வரவிருக்கிறது.