LOADING...
₹500 கோடியைத் தாண்டியது 'கூலி' வசூல்; ஆனால் இது ரஜினிக்கு புதுசு இல்ல..
₹500 கோடியைத் தாண்டியது 'கூலி' வசூல்

₹500 கோடியைத் தாண்டியது 'கூலி' வசூல்; ஆனால் இது ரஜினிக்கு புதுசு இல்ல..

எழுதியவர் Venkatalakshmi V
Aug 28, 2025
02:53 pm

செய்தி முன்னோட்டம்

2025ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் ₹500 கோடி வசூலித்த மூன்றாவது படமாக உருவெடுத்துள்ளது ரஜினிகாந்தின் 'கூலி'. 'கூலி'யின் வசூல், இரண்டாவது வார இறுதிக்குப் பிறகு கணிசமாகக் குறைந்த போதிலும், படத்திற்கு CBFC தந்துள்ள A செர்டிபிகேட் பின்னணியிலும் ₹500 கோடி வசூலைக் கடக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. இது ரஜினிகாந்தின் முந்தைய பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது. எனினும் இது அவருக்கு புதிதல்ல. ரூ.500 கோடி வசூலை தாண்டிய 3வது ரஜினி படம் இது. இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து, 2018இல் வெளியான 2.0 திரைப்படம் ₹666-800 வரை வசூலித்தது. அடுத்ததாக, நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023இல் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.600 க்கும் மேல் வசூல் செய்தது.

பாக்ஸ் ஆபிஸ்

'கூலி' உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள்

'கூலி' அதன் 14 நாட்களில் உள்நாட்டு பிராந்தியங்களில் ₹268.75 கோடி நிகரமாக (₹309 கோடி மொத்தமாக) வசூல் செய்துள்ளது. இது இப்போது இந்தியாவில் ₹ 300 கோடியை நோக்கி நகர்கிறது. இருப்பினும், அதன் 14வது நாள் நிகர வசூல் வெறும் ₹4.50 கோடி மட்டுமே என்பதால், அதை அடைய சிறிது நேரம் ஆகும். வெளிநாடுகளில், இப்படம் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பல தொடக்க நாள் மற்றும் வார இறுதி சாதனைகளை முறியடித்தது. சர்வதேச அளவில் 14வது நாள் முடிவில், கூலி வெளிநாடுகளில் $21 மில்லியனுக்கும் (₹ 182 கோடி) சற்று குறைவாகவே சம்பாதித்துள்ளதாக வர்த்தக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதன் மூலம் படத்தின் உலகளாவிய வசூல் ₹501 கோடியை எட்டியுள்ளது.