
'கூலி': ரணகளமாக வெளியானது தலைவர் 171 படத்தின் டைட்டில் வீடியோ
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக உள்ள 'தலைவர் 171' படத்திற்கு 'கூலி' என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கான டைட்டில் ரிவீல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் ரஜினி நடிப்பில் வெளியான 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்பட பாடலின் வரிகளை ரஜினி கூறிக்கொண்டே, ரௌடிகளை அடித்து வெளுப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தில் பொதுவாக ஒரு வின்டேஜ் கிளாசிக் பாடல் இடம்பெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த வீடியோவிலும் 'செண்பகமே செண்பகமே' பாடலை ரஜினி முணுமுணுப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திரைப்படமும் LCU-வில் இணையுமா என்பது குறித்த தகவல் இல்லை.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைக்கவிருப்பது அனிருத். படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
embed
தலைவர் 171 டைட்டில்
The wait is over! #Thalaivar171 is now #Coolie💥 ▶️ https://t.co/xCCps1DBlu@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @Dir_Chandhru #Thalaivar171TitleTeaser #CoolieTitleTeaser— Sun Pictures (@sunpictures) April 22, 2024