
AK 62: அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்: நீடிக்கும் குழப்பம்
செய்தி முன்னோட்டம்
அஜித்தின் அடுத்த படமான 'AK62' படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் படத்தை பற்றி தினம் ஒரு தகவல், யூக அடிப்படையில் வெளியான வண்ணம் இருக்கிறது. இது அஜித்தின் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. AK 62-ஐ பற்றி இதுவரை வந்த செய்திகள் இதோ:
நடிகர் அஜித்தின் சமீபத்திய வெளியீடான 'துணிவு' படம் வெளியாகும் முன்பே, AK 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'துணிவு' படம் வெற்றியானதை தொடர்ந்து, அஜித்திற்கு அதே போன்றொரு மாஸ் படம் ஒன்றை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர் தரப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை விக்னேஷ்சிவன் பூர்த்தி செய்வாரா என்ற ஐயப்பாடும், அவரின் பட்ஜெட்டும், தயாரிப்பாளர் தரப்பை பின்வாங்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
விக்னேஷ் சிவன் ட்விட்டர் பயோ
So it's official now... #vigneshshivan is not part of #Ak62 !!
— MãÑØJ💙 (@sachinnManoj) February 4, 2023
Removed #AK62 from his bio and changed his cover picture!
Kadhaya olunga ketkama ok pana vendiyathu aprm ilatha vela la paka vendiyathu, direction team evlo day and night work pani irupanga ithukaga pic.twitter.com/1VQCRurBrf
AK 62
விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு
இதற்கிடையில், வதந்திகளை உறுதி செய்யும் விதமாக, விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பயோவில் இருந்து AK 62 படத்தை நீக்கிவிட்டார்.
தற்போது, அடுத்து இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கப்போவதாகவும், பில்லா,ஆரம்பம் பாணியில் இந்த படம் ஒரு மாஸ் படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
மறுபுறம், வெங்கட் பிரபு இந்த படத்தை இயக்கப்போவதாகவும், மங்காத்தா படத்தை போன்றே ஒரு திரில்லர் படமாக இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, தடையற தாக்க, மீகாமன் புகழ் மகிழ் திருமேனி படத்தை இயக்குவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, வெளியாகி உள்ள புதிய யூகத்தின் படி, விரைவில் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை ட்விட்டரில் வைரலாக்கி வருகின்றனர் அஜித்தின் ரசிகர்கள்.
ட்விட்டர் அஞ்சல்
விரைவில் படக்குழுவுடன் புகைப்படம்
— Karthik Ravivarma (@Karthikravivarm) February 8, 2023