Page Loader
இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார்
இசையமைப்பாளர் அனிருத் ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார்

இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 17, 2023
02:29 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்தியா முழுவதும் தேடப்படும் இசையமைப்பாளராக மாறியுள்ளார். தொடர்ச்சியாக அவர் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களாக அவர் இசையமைப்பில் 'லியோ', 'ஜெயிலர்' மற்றும் முதல்முறையாக அவர் இசையமைத்த பாலிவுட் படமான 'ஜவான்' படத்தின் பாடல்கள் என அனைத்தும் சார்ட் பஸ்டர் ஹிட் அடித்தன. போதாதற்கு, ஷங்கரின் 'இந்தியன்- 2' படத்திற்கு அவர் தான் இசையமைப்பாளர். இந்நிலையில், தான் நடிக்க போகும் திரைப்படம் ஒன்றிற்கு இசையமைக்க அனிருத்தை தேர்வு செய்துள்ளாராம் தெலுங்கு சினிமாவின் 'மெகாஸ்டார்' சிரஞ்சீவி. இப்படத்தை இயக்க போவது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எனவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகின்றது.

ட்விட்டர் அஞ்சல்

அனிருத்-முருகதாஸ்-சிரஞ்சீவி காம்போ