
விஜய் டிவியின் லொள்ளுசபா புகழ் நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில், ஓளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஷேசு.
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தற்போது சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சேஷு, சின்னத்திரை மட்டுமின்றி, பல திரைப்படங்களிலும் காமெடியனாக நடித்துள்ளார்.
தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமானார்.
பல படங்களில் நடித்திருந்தாலும், அவரை பிரபலப்படுத்தியது என்னமோ சின்னத்திரை தான்.
நடிகர் சந்தானமும் லொள்ளு சபா மூலம் சினிமாவில் வந்ததால், தன்னுடைய படங்களில் இவருக்கென தனி கதாபாத்திரங்களை உருவாக்கி தந்தார்.
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான, 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்திலும் இவரின் காமெடி பல ரசிகர்களை கவர்ந்தது.
ட்விட்டர் அஞ்சல்
நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி
Get well soon #Lollusabha #Seshu sir 🤝 pic.twitter.com/AuJdFfEVEU
— Tharani ᖇᵗк (@iam_Tharani) March 15, 2024