Loading...
ஓடிச் சென்று கட்டிப்பிடித்த முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் அஜித்திற்கு சர்ப்ரைஸ்; வைரல் வீடியோ
சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் ஓடிச்சென்று அஜித்தை கட்டிப்பிடித்த முதல்வர் விஜய் வீடியோ வைரல்

ஓடிச் சென்று கட்டிப்பிடித்த முதல்வர் விஜய்! சில்வர்ஸ்டோன் பந்தய மைதானத்தில் அஜித்திற்கு சர்ப்ரைஸ்; வைரல் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Sep 12, 2026
08:58 pm

செய்தி முன்னோட்டம்

லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் சர்கியூட் மைதானத்தில் மிச்செலின் லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்திற்கு நேரில் ஆதரவு தெரிவிக்கத் தமிழக முதல்வர் விஜய் வருகை தந்துள்ளார். மைதானத்திற்கு வருகை தந்த விஜய்யை கண்டு நடிகர் அஜித் அவரை நேரில் வரவேற்ற நிலையில், விஜய்யும் அஜித்தைக் கண்டதும் ஓடிச் சென்று அவரைக் கட்டிப்பிடித்துத் தனது அன்பைப் பரிமாறிக் கொண்டார். கடந்த 34 ஆண்டுகளாக திரையுலகில் நண்பர்களாக இயங்கி வரும் இவர்கள் இருவரும் சர்வதேசப் பந்தயக் களத்தில் சந்தித்துக் கொண்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Embed

பந்தயம்

பச்சைக்கொடி அசைத்து பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் விஜய்

மிச்செலின் லீ மேன்ஸ் கப் பந்தய அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த சில்வர்ஸ்டோன் சுற்றின் முதன்மை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் முதல்வர் விஜய், 44 பந்தயக் கார்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் தொடக்கமாகப் பச்சைக்கொடியை அசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார்.

அஜித்தின் அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ் அணி சார்பில் பிரெஞ்சுக் காரை ஓட்டும் ரோமைன் வோஸ்னியாக்குடன் இணைந்து அஜித் எல்எம்பி3 பிரிவில் பங்கேற்கிறார்.

மேலும் இந்தியாவின் முன்னாள் ஃபார்முலா 1 வீரர் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா படேல் ஆகியோரும் இதே பிரிவில் களம் இறங்குவது இந்திய பந்தய கார் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்தியா

இந்தியாவில் கார் பந்தயங்கள் நடத்துவது குறித்து அஜித் பேச்சு

முதல்வர் விஜய்யின் இந்த சர்ப்ரைஸ் வருகை குறித்துப் பேசிய அஜித், "தனது பிஸியான பணிகளுக்கு மத்தியிலும் விஜய் எங்கள் பந்தயத்தைக் காண இங்கு வருகை தந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், இந்தியாவில் குறிப்பாகச் சென்னையில் லீ மேன்ஸ் போன்ற சர்வதேசக் கார் பந்தயங்களை நடத்துவதற்கான கட்டமைப்பு வாய்ப்புகளை ஆய்வு செய்ய இந்த வருகை உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சென்னையில் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ரசிகர்கள் ஆரவாரம்

லண்டனில் நட்சத்திரங்களின் வருகையும் ரசிகர்கள் ஆரவாரமும்

நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் தங்களின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், சில்வர்ஸ்டோன் களத்திற்கு நேரில் வந்து அஜித்திற்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பந்தயத் தளத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் அஜித்தைக் கண்டு சத்தமிட்டு உற்சாகமடைந்த போது, அமைதியாக இருக்குமாறு அஜித் கைகாட்டிய வீடியோவும் வைரலாகி வருகிறது.

2026 ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் தொடரின் 5வது சுற்றாக நடைபெறும் இந்த சில்வர்ஸ்டோன் போட்டி சனிக்கிழமை இரவு இந்திய நேரப்படி 9:30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி நடைபெறுகிறது.

ADVERTISEMENT