Page Loader
சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு 
படக்குழுவினருடன் சமந்தா

சமந்தா- வருண் தவான் நடிக்கும் சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2023
03:22 pm

செய்தி முன்னோட்டம்

சமந்தா மற்றும் பாலிவுட் நடிகர் வருண் தவான் இணைந்து நடிக்கும் புதிய தொடர் 'சிட்டாடல்'. அமெரிக்காவின் பிரபல ஸ்பை தொடரான இந்த சிட்டாடலின் ஆங்கில பதிப்பில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். அதன் இந்திய பதிப்பில் தற்போது சமந்தா நடித்து வருகிறார். 'தி பேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ்-டிகே இணைதான் இந்த தொடரை இயக்குகிறது. இத்தொடரை, அமேசான் நிறுவனம் தயாரிக்கிறது. பல வெளிநாடுகளில் நடைபெற்ற இத்தொடரின் ஷூட்டிங் நிறைவுற்றதாக, தற்போது சமந்தா அறிவித்துள்ளார். சமந்தா, இந்த தொடருக்கு பின்னர் சில காலம் திரையுலகிலிருந்து ஓய்வு எடுக்கப்போகிறார் என செய்திகள் வெளிவந்த நேரத்தில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram அஞ்சல்

சிட்டாடல் தொடரின் படப்பிடிப்பு நிறைவு