Page Loader
மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!
இப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் நிறைவுற்றது

மகான் 2 லோடிங்? சீயான் விக்ரம் வெளியிட்ட புகைப்படம்!

எழுதியவர் Venkatalakshmi V
Feb 11, 2024
04:44 pm

செய்தி முன்னோட்டம்

சீயான் விக்ரம், துருவ் விக்ரம் இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த திரைப்படம் மகான். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் கோவிட் காலகட்டத்தில் தொடர்ச்சியாக தடைகளை தாண்டி வெளிவந்தது. படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக விக்ரமின் மாறுபட்ட நடிப்பு பலரையும் பாராட்ட வைத்தது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி இரண்டாண்டுகள் நிறைவுற்றது. இதற்காக நேற்று விக்ரமும் தன்னுடைய எக்ஸ் தளத்தில் மகான் படத்தின் போஸ்ட்டரை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், இன்று மகான் கெட்- அப்பில் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு 'மகான் 2?' என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறதோ என பலரும் ஆச்சரியத்துடன் கேட்டுவருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

விக்ரமின் பதிவு