'காளியோட சம்பவம்': சீயான் விக்ரமின் வீரதீரசூரன் டீஸர் வெளியானது
'பண்ணையாரும் பத்மினியும்', 'சித்தா' உள்ளிட்ட படங்களை இயக்கிய SU அருண்குமார் அடுத்ததாக இயக்கி வரும் படம் வீரதீரசூரன். இப்படத்தில் 'சீயான்' விக்ரம், SJ சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகவுள்ளது. அதன் பின்னரே முன்கதை வெளியாகும் என அறிவித்து பலரின் கவனத்தை ஈர்த்தார் படக்குழுவினர். இந்த சூழலில் இப்படத்தின் டீஸர் இன்று சத்தமின்றி வெளியாகிவுள்ளது. பெட்டிக்கடை வைத்திருக்கும் விக்ரமிற்கும், அந்த ஊரில் காவல் அதிகாரியாக இருக்கும் SJ சூர்யாவிற்கு நடக்கும் மோதலே கதை என டீஸர் தெரிவிக்கிறது. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியான சில மணிநேரங்களிலேயே 1 லட்சம் வ்யூஸ்களை தாண்டி சென்றுள்ளது.