விஜய் இல்லை, சூர்யா இல்லை..கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக களமிறங்கிய சீயான்
செய்தி முன்னோட்டம்
கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிக்கி தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.
மலையாள படவுலகினர் பலரும் களத்தில் இறங்கி நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இவர்களுக்கு கோலிவுட்டில் இருந்து முதல் ஆளாக ரூ.20 லட்சம் தன்னுடைய சொந்த வைப்பு நிதியில் இருந்து கேரள முதல்வரின் மீட்பு பணிக்கு வழங்கியுள்ளார், நடிகர் சீயான் விக்ரம்.
இந்த தகவலை அவருடைய மேலாளர் யுவராஜ் உறுதி செய்துள்ளார்.
இது தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க இந்தியா ராணுவம் மற்றும் பேரிடர் குழு களத்தில் தீவிரமாக பணி செய்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#ChiyaanVikram donated 20 lakhs to the Kerala Chief Minister's #WayanadLandslide Relief Fund today❤️✨ pic.twitter.com/dw275pICl2
— AmuthaBharathi (@CinemaWithAB) July 31, 2024