நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 62' திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது
நடிகர் 'சியான்' விக்ரமின் 62வது திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ இன்று வெளியாகியுள்ளது. கடைசியாக, விக்ரம் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கரிகால சோழனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து, வரும் ஜனவரி-26ஆம் தேதி அவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்கிடையில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட திரைப்படமான நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'சியான் 62' படத்தின் அறிவிப்பு வீடியோவை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. 'சித்தா' திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.யூ.அருண்குமார் 'சியான் 62' திரைப்படத்தையும் இயக்க இருக்கிறார். ஜிவி.பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தில் விக்ரம் ஒரு மாறுபட்ட கிராமத்துக்காரராக நடித்துள்ளார்.