'சித்தா' இயக்குனருடன் இணையும் சீயான் விக்ரம்
நடிகர் விக்ரம் தனது அடுத்த படத்திற்காக, 'சித்தா' திரைப்படத்தின் இயக்குனரான சு.அருண்குமாரோடு இணைகிறார். சு. அருண்குமார், விஜய் சேதுபதியை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்'. 'சேதுபதி' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 'சித்தா' படத்திற்கும், விஜய் சேதுபதி கால் சீட்டை எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காததால், சித்தார்த்தை வைத்து இயக்கியதாகவும் கூறப்படுகிறது. ₹5 கோடி மதிப்பில் திரைப்படமாக்கப்பட்ட சித்தா திரைப்படம், ₹25 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அருண்குமார் தனது அடுத்த திரைப்படத்திற்காக விக்ரமுடன் இணைகிறார். இத்திரைப்படத்திற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. விக்ரமின் 'இருமுகன்' திரைப்படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் இத்திரைப்படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோலார் தங்க வயலில் நடந்த உண்மைக் கதையை தழுவி திரைக்கதை உருவாக உள்ளது.
#Vikram to helm director Arun Kumar's next film #Chiyaan @chiyaan #ChiyaanVikram #ArunKumar #SuArunKumar pic.twitter.com/IXXQzERp1i— Rustic Roots (@askrusticroots) October 18, 2023