
கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு
செய்தி முன்னோட்டம்
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ராவில், பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் நால்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம், மகளிர் ஆணைய தலைவர் குமாரி, நேரில் விசாரணை நடத்தினார்.
அதன்பிறகு, மாணவிகளிடம், எழுத்துபூர்வமாக புகார் பெறப்பட்டு, உதவி பேராசிரியர் ஹரி பத்மன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, பிரபல நடிகையும், கலாக்ஷேத்ராவின் முன்னாள் மாணவியுமான அபிராமி, கலாக்ஷேத்ரா நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசி இருந்தார்.
இதனை கடுமையாக சாடிய பாடகி சின்மயி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு, "நீங்கள் விரும்பினால், தயாராக இருக்கும்போது பேசலாம் இல்லையெனில் பேச வேண்டாம். இது நமது அவமானம் அல்ல, நமது தவறு அல்ல." என பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சின்மயி ட்விட்டர் பதிவு
FINALLY, I SHOUT - HAD I REMAINED SINGLE OR BEEN UNLUCKY TO MARRY INTO A FAMILY OTHER THAN THE ONE I MARRIED INTO THE INLAWS I HAVE -
— Chinmayi Sripaada (@Chinmayi) April 4, 2023
I COULD NOT HAVE SPOKEN UP.
I'D HAVE BEEN SILENT JUST LIKE THE COUNTLESS OTHER GIRLS I KNOW WHOSE CRAPPY PARENTS INLAWS ASK THEM TO SHUT UP.