Page Loader
குட்டிஸ்களின் ஃபேவரைட் சோட்டா பீம் படத்தின் டீஸர் வெளியானது; மே மாதம் திரைப்படம் ரிலீஸ்! 
இத்தொடரின் ஒரு பகுதியான 'சோட்டா பீம் அண்ட் த கர்ஸ் ஆஃப் தம்யானின்' திரைப்படமாகிறது

குட்டிஸ்களின் ஃபேவரைட் சோட்டா பீம் படத்தின் டீஸர் வெளியானது; மே மாதம் திரைப்படம் ரிலீஸ்! 

எழுதியவர் Venkatalakshmi V
Mar 15, 2024
04:19 pm

செய்தி முன்னோட்டம்

சோட்டா பீம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அனிமேஷன் சூப்பர்-ஹீரோ தொடர்களில் ஒன்றாக உள்ளது. இத்தொடரின் ஒரு பகுதியான 'சோட்டா பீம் அண்ட் த கர்ஸ் ஆஃப் தம்யானின்' திரைப்படமாகிறது. அதன் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. தீய சக்தியான தம்யானுக்கு எதிராக, சோட்டா பீம் மற்றும் அவனது நண்பர்கள் நடத்தும் போராட்டத்தை சுற்றி படம் சுழல்கிறது. இப்படத்தில் குரு சாம்புவாக பழம்பெரும் நடிகர் அனுபம் கேர் நடிக்கிறார். யக்யா பாசின், பீம் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகரந்த் தேஷ்பாண்டேவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆஷ்ரியா மிஸ்ரா, சுட்கியாக நடிக்க, சுரபி திவாரி, டுன்டுன் ஆண்ட்டி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜீவ் சிலகா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம், மே-24, 2024 அன்று திரையரங்குகளில் வர உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சோட்டா பீம் திரைப்படம்