Page Loader
சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்; வைரலாகும் காணொளி 
சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்

சென்னை மாலில், நூலிழையில் தப்பிய பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்டின் மகள்; வைரலாகும் காணொளி 

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2023
04:30 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர். இவர், சமீபத்தில் தனது குடும்பத்தாருடன் சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலிற்கு சென்றுள்ளார். அங்கே, அவரது மகள் அணிந்திருந்த 'க்ராக்ஸ்'(Crocs) வகை செருப்பு, அங்கிருந்த நகரும் நடைமேடையில்(escalator) மாட்டியுள்ளது. உடனே சுதாரித்த வெங்கடேஷ் பட்டின் மகள், காலை எடுத்துள்ளார். எனினும் அவரின் செருப்பின் ஒரு பாகம் சேதமாகியுள்ளது. இதனை அடுத்து, மாலின் நிர்வாகத்தினரை அணுகியுள்ளார் வெங்கடேஷ் பட். அதனைத்தொடர்ந்து, வெங்கடேஷ் பட், மாலில் இருந்தே ஒரு காணொளி பதிவை வெளியிட்டு, நடந்தவற்றை விளக்கினார். சேதமடைந்த செருப்பை காண்பித்து, 'சற்று தாமதித்திருந்தாலும், என் மகளுடைய கால்கள் அந்த எஸ்கலேட்டரில் மாட்டி இருக்கக்கூடும்' என வருத்தம் தெரிவித்திருந்தார்.

embed

வெங்கடேஷ் பட்டின் முதல் காணொளி 

'இது ரொம்போ ரொம்போ சீரியஸான விஷயம், ரொம்போ ஜாக்கிரதையா இருங்க...' சென்னை பீனிக்ஸ் மாலில் தனது மகளுக்கு நடந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்த வெங்கடேஷ் பட்#Chennai #PhoenixMall #VenkateshBhat #Esclator pic.twitter.com/EpnbsFolYO— Polimer News (@polimernews) October 2, 2023

card 2

சிங்கப்பூர், மலேஷியா போன்ற ஊர்களில் தடை செய்யப்பட்டுள்ள க்ராக்ஸ்?

இதனை தொடர்ந்து, இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், தன் மகளை போல வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவர் அந்த வீடியோ பதிவை வெளியிட்டதாகவும், இதில் யார் மீது தப்பு என்று விவாதம் செய்வதை விட, இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் எப்படி தற்காத்து கொள்ளலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே தான் வீடியோ பதிவை செய்ததாகவும் கூறினார். மேலும் அவர், க்ரோக்ஸ் வகை செருப்புகள், சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில், எஸ்கலேட்டகளில் அணிய தடை என சிலர் கூறியதாகவும், ஆனால் அதன் உண்மை தன்மை தெரியவில்லை எனவும், இது போன்ற சம்பவங்களின் போது, பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

embed

வெங்கடேஷ் பட்டின் இரண்டாவது காணொளி 

மகளுக்கு நேர்ந்த விபத்து... "மாலில் இருந்து உடனே வந்த போன்" வேதனையுடன் வெங்கடேஷ் பட் சொன்ன காரணம்?#Chennai #VenkateshBhat #PhoenixMall #NewsTamil24x7 pic.twitter.com/2Zg4QLAIA0— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) October 2, 2023