LOADING...
சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு 
சந்திரமுகி 2, செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சந்திரமுகி 2 : விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிப்பு 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 29, 2023
05:59 pm

செய்தி முன்னோட்டம்

ரஜினிகாந்த்-பிரபு- ஜோதிகா நடிப்பில் 17 ஆண்டுகள் முன்னர் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. ஏற்கனவே தென்னிந்திய மொழிகளில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படம், தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டது. பி.வாசு இயக்கத்தில் உருவான அந்த திரைப்படம் அடைந்த வெற்றி, அவர்களை அடுத்த பாகம் எடுக்க வைத்தது. ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு என பலர் நடிக்க, தற்போது உருவாகியுள்ளது 'சந்திரமுகி 2 ' திரைப்படம். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது படங்கள் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்நிலையில், படம் வெளியாகும் தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் பகிர்ந்த தகவலின்படி, இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கு 'சந்திரமுகி 2 ' வெளியாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

சந்திரமுகி 2 ரிலீஸ்