NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்
    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

    ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை; நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 23, 2025
    09:04 am

    செய்தி முன்னோட்டம்

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    இதன் மூலம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணையை அதிகாரப்பூர்வமாக முடித்துள்ளது.

    ஆகஸ்ட் 2020 இல் இந்த வழக்கை கையகப்படுத்திய சிபிஐ, மும்பை நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்து, அவரது தற்கொலைக்கு எந்தவொரு தவறான செயல் அல்லது வெளிப்புற அழுத்தமும் இல்லை என்று நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், சுஷாந்தின் தந்தை நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளையும் இந்த இறுதி அறிக்கை நிராகரிக்கிறது. இதனால் அவர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    ஆதாரம்

    ஆதாரம் இல்லை

    எய்ம்ஸ் தடயவியல் நிபுணர்களுடன் நடத்தப்பட்ட சிபிஐ விசாரணையில், நிதி முறைகேடு அல்லது சுஷாந்தின் டிஜிட்டல் பதிவுகளை சேதப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

    சிபிஐ தரப்பில் வழக்கு முடிக்கப்பட்ட போதிலும், சுஷாந்தின் குடும்பத்தினர் இதை எதிர்த்து எதிர்ப்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமூக ஊடகங்களில் மிகவும் விவாதிக்கப்பட்ட இந்த வழக்கில், ஜாமீன் வழங்குவதற்கு முன்பு ரியா சக்ரவர்த்தி 27 நாள் சிறைவாசம் உட்பட கடுமையான ஆய்வு மற்றும் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, ஜூன் 14, 2020 அன்று, 34 வயதில், சுஷாந்த் தனது பாந்த்ரா அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார்.

    சிபிஐ அறிக்கை இப்போது வந்துள்ள நிலையில், மேல்முறையீடு செய்யாவிட்டால், வழக்கு சட்டப்பூர்வ முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    நடிகர்
    சிபிஐ

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பாலிவுட்

    நடிகை தீபிகா படுகோனையும், குழந்தையையும் நேரில் சந்தித்து வாழ்த்திய ஷாருக்கான் ஷாருக்கான்
    நடிகர் சூர்யா 'தூம் 4' படத்தில் வில்லனாக நடிக்கிறாரா? நடிகர் சூர்யா
    மூன்றாவது முறையாக மகன் ஆர்யன் கான் உடன் இணையும் ஷாருக்கான் ஷாருக்கான்
    பாலிவுட் நடிகை அலியா பட்டிற்கு ADD நோய்; அப்படி என்றால் என்ன? நடிகைகள்

    நடிகர்

    'ஆடுஜீவிதம்': நிர்வாணக் காட்சிகளைப் படமாக்க 3 நாட்கள் பட்டினி இருந்த நடிகர் பிருத்விராஜ்  மலையாள படம்
    அதிதி ராவ் உடன் தனது திருமணம் எப்போது? நடிகர் சித்தார்த் கூறிய பதில் திருமணம்
    கன்னட இயக்குனர்- நடிகர் துவாரகிஷ் பெங்களூருவில் காலமானார் கன்னட படங்கள்
    வாக்காளர் பெயர் பட்டியலில் மாயமான நடிகர் சூரியின் பெயர் வாக்காளர்

    சிபிஐ

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு  ஜெயலலிதா
    தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் ஜெயலலிதாவின் நகைகள்: மார்ச் 6ஆம் தேதி, தமிழக உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் ஜெயலலிதா
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம்
    யூகோ வங்கியில் ரூ.820 கோடி முறைகேடு; 7 நகரங்களில் சிபிஐ சோதனை வங்கிக் கணக்கு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025