
சர்வதேச விருது வென்ற தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சர்வதேச விருதை வென்றுள்ளது.
இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக இந்தியாவில் வெற்றிபெற முடியவில்லை என்றாலும், நேற்று லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், சிறந்த அயலக மொழிப்படம் என்ற விருதை வென்றுள்ளது.
இந்த பிரிவில் போட்டியிட்ட ஜெர்மானிய படங்களான சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்ஸி போன்றவற்றுடன் போட்டியிட்டு, இப்படம் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை இப்படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது எக்ஸ் பக்கத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.
இப்படத்தில் தனுஷ் உடன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் பீரியட் ஜானரில் அமைக்கப்பட்டிருந்தது.
ட்விட்டர் அஞ்சல்
'கேப்டன் மில்லர்' திரைப்படம்
Thrilled to share that #CaptainMiller has won the Best Foreign Film award at the UK’s National Awards! Glad to have contributed as one of the writers. Big cheers and thanks to #ArunMatheswaran, @dhanushkraja, @gvprakash, and the entire team! pic.twitter.com/OF56F8ZE5a
— Madhan Karky (@madhankarky) July 4, 2024