ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர்
இந்தியாவின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. '80களில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி, '90களின் காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018-ம் ஆண்டு காலமானார். தற்போது, தனது மனைவியின் அகால மரணம் பற்றி முதல்முறையாக பேட்டியளித்துள்ளார், அவரது கணவர் போனி கபூர். நடிகை ஸ்ரீதேவி, தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்னர், ஹீரோயினாக தென்னிந்தியாவை ஆட்சி செலுத்தி விட்டு, பாலிவுட் பக்கம் சென்றார். அங்கேயும் உச்சம் தொட்ட ஸ்ரீதேவி, 1996-ம் ஆண்டு பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது ஸ்ரீதேவி கர்ப்பமா?
ஸ்ரீதேவியை திருமணம் செய்தபோது, போனி கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்த கதை அனைவருக்குமே தெரிந்ததே. ஸ்ரீதேவி, போனி கபூரை திருமணம் செய்த பொது, கர்ப்பிணியாக இருந்தார் என்றும், அதனால், வேறு வழியின்றி திருமணம் செய்தார் என்றும் செய்திகள் இன்று வரை வெளியான வண்ணம் உள்ளது. அதை போனி கபூர் மறுத்துள்ளார். நடிகை ஸ்ரீதேவிக்கும், தனக்கும், 1996 -இல் ஷீர்டி-யில் ரகசியமாக திருமணம் நடைபெற்றது என்றும், ஆனால் வெளி உலகிற்கு தெரிவிக்கவில்லை என்றும் போனி கபூர் கூறியுள்ளார். ஸ்ரீதேவியின் கர்ப்பம் பற்றி வெளியே தெரியவரவே, மீண்டும் ஒரு முறை, 1997-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், பலர் முன்னிலையில் இரண்டாவது முறை, ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டாராம் போனி கபூர்.
யாரும் எதிர்பார்க்காத ஸ்ரீதேவி மரணம்!
ஸ்ரீதேவி தனது உடல் எடையையும், அழகையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என போனி கபூர் தெரிவித்துள்ளார். சினிமாவில் இருப்பதால், தான் எப்போதும் பிட்ட்டாக தோற்றமளிக்க வேண்டும் என ஸ்ரீதேவி மெனெக்கெடுவாராம். அதனால் பல நாட்கள் பட்டினி கிடப்பர் என்ற அதிர்ச்சி செய்தியை வெளிப்படுத்தினார் போனி கபூர். உடல் எடையை பராமரிக்க, கடுமையான உணவு கட்டுப்பாடுகள் கடைபிடித்ததால், ஸ்ரீதேவிக்கு அவவ்போது குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படும் என்றும், அதனால், அவ்வப்போது மயங்கி விடுவார் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி தான் அந்த துரதிருஷ்ட நாளன்று, ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கிவிட்டார் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.
துபாயில் நடந்தது என்ன?
ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். அன்று, மதிய உணவை முடித்துவிட்டு, தனது அறையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. அவருடன் அவரது கணவரோ, குடும்பத்தினரோ இல்லை. அந்த வாரம் அவர்களது திருமணநாள் என்பதால், மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக, போனி கபூர் அன்று மதியம் இந்தியாவிலிருந்து கிளம்பி, துபாயில் ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இருவரும் இரவு விருந்து செல்ல திட்டமிட்டிருந்தனர். குளித்து விட்டு வருவதாக சொன்ன ஸ்ரீதேவி நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகமடைந்த போனி, அங்கிருந்த ஹோட்டல் நிர்வாகத்தினரின் உதவியுடன் ரூமை திறந்துள்ளார். அங்கே குளியல் தொட்டியில், மயங்கி கிடந்துள்ளார் ஸ்ரீதேவி. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சோதித்ததில், அவர் மரணமடைந்தது தெரிய வந்துள்ளது.
ஏன் இத்தனை நாள் மௌனம்?
ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்தும் அந்த பேட்டியில் மௌனம் கலைத்தார் போனி கபூர். "ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது தற்செயலாக நடந்த விபத்து. துபாய் காவல்துறையினர், என்னிடம் தொடர்ச்சியாக 48 மணிநேரம் விசாரணை செய்தனர். தொடர்ந்து எனது மனைவியின் மரணம் குறித்தே பேசிவிட்டதால், வெளியுலகத்தினரிடம் இது பற்றி பேச ஒன்றுமில்லாமல் போய்விட்டது. எனது மனதும் விட்டு போனது. என்னை விசாரித்த அதிகாரிகள், உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட எண்ணற்ற சோதனைகளை என்மேல் செய்தனர். இந்திய ஊடகங்களில் இருந்து அதிகளவில் அழுத்தம் இருந்ததன் காரணமாகவே இந்த அளவுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். இறுதியாக மருத்துவ அறிக்கையில், இது கொலையல்ல, இயற்கையான மரணமே என தெரிவிக்கபட்ட பிறகுதான், என்னுடைய விசாரணை நிறைவுற்றது.